1. தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் - இலட்சித கோயில், மண்டகப்பட்டு, விழுப்புரம். மகேந்திரவர்ம பல்லவன் (கிபி.580-630) கட்டுவித்தது.
(பாண்டி நாட்டில் பிள்ளையார்பட்டி குறித்த மூலத் தகவல் இன்னமும் ஆராய்ச்சியில்)
2. பாண்டியர்களில் முதல் குடைவரைக் கோயில் திருநெல்வேலி, மலையடிக் குறிச்சி. கட்டுவித்தது பாண்டியன் மாறன் சடையன் ii (கிபி.750)
3. 'ஐ' என்ற எழுத்து வடிவம் முதலில் காணப்பெற்ற இடம் செஞ்சி, திருநாதர் குன்று.
4. குடைவரைக் கோயில் எதுவும் 'பாடல்பெற்ற தலம்' இல்லை
5. இந்தியாவில் முதல் குடைவரைக் கோயில்கள் கட்டப்பெற்ற இடங்கள், பராபர், நாகர்ஜுனி (பாட்னா-கயாவுக்கு இடையேயுள்ள குன்றுகள்) - கடினபாறைகளில் கட்டுவித்தவர் அசோகர் (கிமு.273-232).
தமிழ்நாட்டிலும் அனைத்தும் கடினபாறைக் குன்றுகளே.
மேற்குக்கரையில் சாளுக்கியர்கள் (வாதாபி, எல்லோரா) மணல்பாறைகளே.
(எனது கீச்சுப் பதிவு)