அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, February 21, 2018

கழுகுமலை - சமணர் படுக்கை

வியப்பூட்டும் #கழுகுமலை #சமணர்படுக்கை:

பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கிபி.765-790) காலத்தில் திகம்பர சமணர்களால் செதுக்கப்பெற்ற சிற்பங்கள்!
150 தீர்த்தங்கரர்களின் அழகு அணிவகுப்பு; கீழே தமிழ் வட்டெழுத்து. தாய், தந்தை, மகள் என குடும்பத்தோடு இணைந்த குழுச்சிற்பமும் உண்டு.

#கழுகுமலை #வெட்டுவான்கோயில் :
கி.பி8ஆம் நூற்றாண்டின் திராவிடக் கட்டிடக் கலைச் சிறப்பு, காணுந்தோறும் உவப்பு.
சிவன், திருமால், பிரம்மா என மும்மூர்த்திகளுக்கான கோயில்.யார் கண்பட்டதோ, பாதியில் நிற்கிறது, தமிழனுக்கோ இழப்பு.
விமானமும் கருவறையும் உள்ளே பிள்ளையாருமே தற்போது இருப்பு.

#கழுகுமலை தமிழ் #வட்டெழுத்துகள்
கழுகுமலைச் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களின் கீழே விளக்கக் குறிப்பை எழுதிவைத்த முன்னறிவு.
இது தமிழ் வட்டெழுத்து. வடக்கே சோழரும் பல்லவரும் கிரந்தத்தில் எழுத, தெற்கே பாண்டியர் வட்டெழுத்தையே மிகப் பயன்படுத்தினராம்.
நானும் வாசிப்பேன் ஓர்நாள்! https://t.co/jwbFq7j1vB